✡ ஶ்ரீமந் நாராயணர் உணர்வு ✡

கல்கி மகா அவதாரம்ஶ்ரீமந் நாராயணர் உணர்வு என்ற வலைதளத்திற்கு

உங்களை உள்ளன்போடு வரவேற்கின்றோம்.


எல்லாத் தர்மங்களையும் விட்டு, என்னை ஒருவனையே சரணமாக அடைவாயாக! நான் உன்னை சகல பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன், வருத்தப்படாதே. -- ஶ்ரீமத் பகவத் கீதை 18:66


.

1. எல்லா மத வேதங்களையும் நிறைவேற்றுபவராக ஶ்ரீமந் நாராயணர் சாதாரண மனித வடிவத்தில் தென்னிந்தியாவில் வந்துவிட்டார்!


2.அவரது மூல ரகசிய நாமம்: ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணா! பொது வழக்கத்தில் நாம் இறைவனை, காரண இடுகுறி பெயர்களைக் கொண்டு, ஶ்ரீமந் நாராயணர் என்றும், அல்லா என்றும், கிறிஸ்து இயேசு என்றும் அழைக்கின்றோம்.


3. உலகெங்கிலும், மற்றும் இந்தியாவில் வசிக்கும் பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணாவின் சீடர்களும், மற்றும் அவரது பக்தர்களும், இந்த மகோன்னத நற்செய்தியை உங்களுக்கு வெளிப்படையாக வழங்குவதில் பெறும் மகிழ்ச்சி அடைகிறோம்!


4. ஆதிமூலமான பரம்பொருளையும், அவர் அருளின அனைத்து மத வேதங்களையும் பற்றி அறிய விரும்புகின்ற அனைவரையும், எந்தவித ஜாதி, மத, இன, மொழி, வயது, நாடு முதலிய பேதங்களைக் கடந்து இந்த வலைத்தளம் உங்களை அழைக்கின்றது!


5.. எல்லா மத வேதங்களையும் அருளின சர்வ வல்லமையுள்ள இறைவனான ஶ்ரீமந் நாராயணர், பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணா, பிப்ரவரி திங்கள், 24-ஆம் தேதி, 1921-ஆம் வருடம், தாமிரபரணி நதி பாயும் திருநெல்வேலி மாவட்டத்தில் சாதாரண மனிதனாக தோன்றியுள்ளார்.


6.. கலி-யுகமான தற்காலத்தில் தோன்றியுள்ள எல்லா விதமான ஆபத்துகளிலிருந்து தமது பக்தர்களை காப்பதற்காகவும், மற்றும் அவர்களுக்கு பிறப்பு, பிணி, மூப்பு, மரணம் போன்றவை தீண்டா 'திவ்ய தேகத்தை' அளித்து (மரணமில்லா பெருவாழ்வு) அவர்களை தம்முடன் ஶ்ரீ 'வைகுண்டம்' அழைத்து செல்ல வந்துள்ளார்.


7. வேதத்தை அருளினவரான பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணா மாத்திரம் அதில் புதைந்துள்ள உட்பொருளை அறிவார். மற்றெவரும் இந்த இரகசியங்களை அறியமாட்டார்கள். இவரது உபதேசம் அனைத்து வேதங்களின் உண்மையான பொருளை உணர்த்தும். இந்த அறிவை நாம் அவரிடமிருந்து பெறாவிட்டால் 'ஜீவன்-முக்தி' (மரணமில்லா பெருவாழ்வு) அடைய முடியாது.


8. எல்லா மத வேதங்களின் ஆழ்ந்த உட்பொருளை முழுவதுமாக வெளிப்படுத்தி, இந்த இரகசியங்களை தமது அன்பார்ந்த சீடர்கள் மூலம் தெரிவித்துள்ளார். இவரது திருவாய் மொழி 'பரம வேதம்' என்று வழங்கப்படுகிறது. இவற்றை அறிந்தோர் ஒருபோதும் மரிப்பதில்லை.


9. நாற்பது ஆண்டு காலமாக இவர் உபதேசித்த 'பரம வேதம்' நமது மடமையை நீக்கி 'ஞான ஒளியை' அளிக்கிறது. இந்த உபதேசம் தான் உண்மையான 'சாகாக் கல்வி'. இறைவன் பால் உண்மையான 'பிரேம பக்தி' உள்ளோருக்கு மாத்திரம் தான் இந்த 'பரம வேதம்' தன் பலனை அளிக்கும். அவர்கள் மாத்திரம் தான் அவரின் திருவருளால் இதன் பொருளை புரிந்து கொள்வர்.


10. நமது தீவினைகளாகிய 'ஜென்ம பாவம்' மற்றும் 'கர்ம பாவம்' இவரது கிருபையால் மாத்திரம் முற்றிலும் நசிந்து விடும். இதுகாரும் யாராலும் வெல்ல முடியாத 'ஐம்புலன்களை' மிக எளிதில் வென்று பேரானந்தம் பெறலாம்.


11. ஶ்ரீமந் நாராயணரும் அவர் அனுப்பிய அவதாரங்களும் ஒன்றல்ல. அவதாரங்கள் தங்களுடைய காலமும் பணியும் நிறைவேறிய பிறகு மரிப்பார்கள். ஶ்ரீமந் நாராயணருக்கு துவக்கமும் முடிவும் கிடையாது. இப்பொழுது கலி-யுகத்தின் முடிவில் தோன்றியுள்ளவர் அவதாரமன்று. இவர் ஆதிமூலமான ஶ்ரீமந் நாராயணர்! இவரது திருவடிகளில் முற்றிலுமாய் சரணாகதி அடைவதே இக்காலத்தின் தர்மமாகும்.


12. ஶ்ரீமந் நாராயணரது வருகையை அவரது திருவருளாலே மாத்திரம் புரிந்துக்கொள்ள முடியும். வேதம் ஓதுவதாலோ, ஆசாரங்களாலோ, தவத்தாலோ, தான தர்மங்களாலோ மற்றும் எந்தவிதமான சொந்த முயற்சிகளாலும் அவரை அடைய முடியாது. அவர் அருளால் அவர் தாள் பணிவதே ஒரே வழி!


13. நாம் தற்போது ஐம்புலன்களின் சிறைக்குள் சிக்கிக் கொண்டிருப்பதனால் வாழ்க்கையில் எந்த விதமான வெற்றியையும் காணமுடியவில்லை. மரண சம்சார சாகரத்தில் சிக்கித் தவிக்கின்றோம். இந்த நிலையிலிருந்து நம்மை கரையேற்ற பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணா ஒருவரால் தான் முடியும்.


14. பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணாவின் 'நாம சங்கீர்த்தனமே' இக்காலத்தில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான செயலாகும். பிரம்ம முகூர்த்தத்தில் (4.30 a.m to 6.00 a.m.) இவரது திரு உருவத்தை தியானம் செய்தால் இவரது நேரடியான தரிசனம் உங்கள் வீட்டிலேயே கிடைக்கும்.


15. கலி-புருஷனின் மிக கொடிய ஆட்சியிலிருந்து தப்பிக்கவும், பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணாவின் பொற்காலமான 'சத்திய-யுகத்தில்' பிரவேசிக்கவும் இவரது சரணாரவிந்தங்களை பற்றுவதே ஒரே உபாயமாகும்.


16. இந்த வலைதளத்தியுள்ள செய்திகளை அறிய விரும்பும் உங்கள் அனைவருக்கும் அவரது நல்லாசி கிடைக்க வேண்டுமென்று உலகெங்கிலுமுள்ள அவரது சீடர்களும் மற்றும் பக்தர்களும் அவரிடம் பிரார்த்தனை செய்கிறோம்.

இந்த வலைதளத்தின் ஸ்தாபகர்

பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணா மாத்திரமே இந்த வலைதளத்தின் ஸ்தாபகர். இதில் அடங்கியுள்ள அனைத்து இரகசியங்களும் அவர் வெளிபடுத்தி அறியப்பட்டவை. அவருக்கே எல்லா புகழும் சேரும். அவரது திருவடிகளில் இந்த வலைதளத்தை சமர்ப்பிக்கின்றோம்.

இந்த வலைதளத்தை கவனித்து வருவோர்

பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணாவால் நேரடியாக தீட்சை அளிக்கப்பெற்று அவரது சீடர்களாக பல ஆண்டுகாலமாக பயிற்சி பெற்று முழுநேர தொண்டர்களாக பணியாற்றும் அன்பர்களால் இவ்வலைதளம் கவனிக்கப்படுகிறது.